நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பொங்கல் ரேசில் அயலான், கேப்டன் மில்லர், மேரி கிறிஸ்துமஸ், மிஷன் சேப்டர் 1 படங்கள்

சென்னை: 

2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்ச்சினிமாவில் புதிய படங்கள் வரிசைக்கட்டி திரைக்குக் காத்துக்கொண்டிருக்கின்றன. 

அவ்வகையில், நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். 

மேலும், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களைக் கவர்ந்தது. 

நடிகர் விஜய்சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ், நடிகர் அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 திரைப்படங்களும் திரைக்கு வரவுள்ளன. 

நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய்சேதுபதி மற்றும் அருண் விஜய் ஆகியோர் இந்த பொங்கல் ரேசில் குதித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset