நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் மணிரத்தினத்தின் THUG LIFE திரைப்படத்தில் இணைந்தனர் கௌதம் கார்த்திக், ஜோஜு ஜோர்ஜ் 

சென்னை: 

இயக்குநர் மணிரத்னம் 35ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து THUG LIFE என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் இணைந்தனர் என்று ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அறிவித்தனர். 

இந்நிலையில், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ஜோஜு ஜோர்ஜ் தற்போது THUG LIFE படத்தில் இணைந்துள்ளனர் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். 

நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு மணிரத்னம்- கமல்ஹாசன் கூட்டணியில் THUG LIFE திரைப்படம் உருவாகி வருகிறது. 

THUG LIFE திரைப்படத்திற்கு இயக்குநர் மணிரத்தினத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  

நடிகர் கமல்ஹாசனின் 234ஆவது படமாக THUG LIFE திரைப்படத்தில் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு இருவரும் பணியாற்றி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset