நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாம் விவகாரம் தொடர்பான சர்ச்சை கருத்து; ஙே கூ ஹாமிற்கு எதிராக போலீஸ் நடவடிக்கை 

கோலாலம்பூர்: 

இஸ்லாம் விவகாரம் தொடர்பான சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாமிற்கு எதிராக காவல்துறையினர் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். 

ஙே கூ ஹாமின் கருத்துக்கு எதிரான பல போலீஸ் புகார்கள் தங்கள் தரப்புக்குக் கிடைக்கப்பெற்றதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார். 

இன்குய்ரி விசாரணையான KEP விசாரணைக்கு இந்த விவகாரம் உட்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். 

மலேசிய இஸ்லாமிய நல விவகார மன்றத்தின் விவகாரத்தில் தமது கருத்தை பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார். 

அதில்  இஸ்லாமிய மன்றத்தில் இஸ்லாம் அல்லாதவர்களை சிறப்பு செயற்குழுவின் நிபுணர்களாக  நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை குறிப்பிட்டிருந்தார். இதனை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லிய நிலையில் இஸ்லாமியர்களிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன. 

அத்துடன், இஸ்லாம் விவகாரங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் தலையிட வேண்டாம் என்று சிலாங்கூர் ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset