நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆர்டிஎஸ் இணைப்பு திட்டத்தை பிரதமர் அன்வார், லீ நேரடியாக பார்வையிட்டனர்

கோலாலம்பூர்:

ஆர்டிஎஸ் இணைப்பு திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹுசென் லூங்கும் இன்று நேரடியாக பார்வையிட்டனர்.

ஆர்டிஎஸ் இணைப்பு திட்டம் என்பது ஜொகூர்பாருவில் உள்ள புக்கிட் சாகர், சிங்கப்பூரின் வூட்லண்ட்ஸ் ஆகிய இடங்களை இணைக்கு நான்கு கிலோமீட்டர்கள் கொண்ட பயணிகள் ரயில் ரயில் திட்டமாகும்.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் இத்திட்டத்தின் கட்டுமான பணி 65 சதவீதம் பூர்த்தியாகியுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளின் பிரதமர்கள் அக்கட்டுமான பணிகளை நேரடியாக பார்வையிட்டனர்.

இரண்டு உயர்மட்ட தலைவர்களும் திட்ட தளத்தில் சந்திப்பது இதுவே முதல் முறை.

இதன் மூலம் பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள திட்டத்திற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது.

மேலும் பிரதமர் அன்வாரும் பிரதமர் லீயும் ஒரு தகடு ஒன்றில் கையெழுத்திட்டனர்.

இது திட்டத்தின் கட்டுமானத்தில் இரு நாடுகளின் அர்ப்பணிப்பை அடையாளப்பூர்வமாகக் காட்டுகிறது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சிங்கப்பூர் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், ஜொகூர் மந்திரி புசார்  டத்தோ ஒன் ஹபிஸ் காசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே ஆர்டிஎஸ்  வாயிலாக ஒரு மணி நேரத்திற்கு 10,000 பயணிகள் வரை பயணிக்கும் திறன் மற்றும் இரண்டு நிலையங்களுக்கு இடையே சுமார் ஐந்து நிமிட பயண நேரத்தை கொண்டதாகும்.

இந்த திட்டம் வரும் டிசம்பர் 2026 இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் முழுமை பெற்றால் சிங்கப்பூ, ஜொகூர் பாரு இடையே எளிதான, வசதியான பயணத்தை வழங்கப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset