நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொங்கல் திருநாளன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை இல்லையா?

கோலாலம்பூர்:

பொங்கல் திருநாளுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை இல்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு மடானி அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மஇகா கல்வி குழுவின் செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறினார்.

வரும் ஜனவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய தினம் மக்கள் குடும்பத்தாருடன்  வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் அன்றைய தினம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என பல புகார்களை கல்விக் குழு பெற்றுள்ளது.

பொங்கல் போன்ற விழாக்களுக்கு சிறப்பு விடுமுறை, மாற்று நாள் விடுமுறை வழங்குவது வழக்கம்.

ஆனால் இம்முறை அதுபோன்ற விடுமுறை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பது பெரும் குறையாக இருந்து வருகிறது.

தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் என பல தரப்பிடம் இருந்து புகார்கள் கிடைத்துள்ளது.

அதே வேளையில் பல பள்ளிகளில் விடுமுறைக்கு விண்ணப்பம் செய்வதில் பள்ளி ரீதியிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த பிரச்சினைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக கல்வியமைச்சு பொங்கலுக்கு சிறப்பு விடுமுறை அல்லது மாற்று விடுமுறை வழங்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும்.

இதுவே ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் கோரிக்கையாக உள்ளது என்று சிவசுப்பிரமணியம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset