நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெர்டேக்கா அரங்கம் இவ்வாண்டு திறக்கப்படும்

கோலாலம்பூர்:

நாட்டின் வரலாற்று சின்னமான  மெர்டேக்கா அரங்கம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படவுள்ளது.

பிஎன்பி குழுமத்தின் தலைவர் அர்ஷாத் ராஜா உடா இதனை தெரிவித்தார்.

இந்த அரங்கம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருக்கிறது.

பிஎன்பியின் மெனாரா 118 கோபுரம் கட்டும் பணிக்கான இந்த அரங்கம் மூடப்பட்டது.

1957 ஆம் ஆண்டு இருந்ததைப் போலவே மைதானத்தை பழைய நிலைக்குத் திரும்பச் செய்வதற்கான மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு மலேசிய பாரம்பரிய நிறுவனம், தேசிய பாரம்பரியத் துறையின் ஒத்துழைப்பு இருந்தது.

இந்த வரலாற்று அரங்கத்தின் மறுசீரமைப்பு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்பை அதிகரிக்கும்.

நீடித்த பொருளாதாரம், சமூக வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வரலாற்று இடத்திற்கு உள்ளூர், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset