நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரை மாற்றுவதற்கான வழிகளை கெஅடிலான் எம்பிகள்  முன்மொழிவது விசித்திரமானதல்ல: வான் சைபுல்

கோலாலம்பூர்:

அன்வாரை மாற்றுவதற்கான வழிகளை கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிவது விசித்திரமானதல்ல.

பெர்சத்துவின் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் மேற்கண்டவாறு கூறினார்.

மக்களவை கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இக்கூட்டத் தொடரின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் முன்மொழிந்திருந்தார்.

நீண்ட காலமாக அளிக்கப்பட்டு வந்த சீர்திருத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், அன்வார் தலைமையிலான ஆட்சியில் சில பிகேஆர் பிரதிநிதிகள் திருப்தியடையாத  இருப்பதாக இந்த முன்மொழிவு காட்டுகிறது.

ஆகவே அன்வாரை மாற்றுவதற்கான வழியை பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தால் அது விசித்திரமாக இருக்காது.

அரசாங்கத்தில் உள்ள கெஅடிலான் பிரதிநிதிகள்,  பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன்.

மக்கள் நலனைக் கவனிக்க அன்வார் தவறியதற்கு நீங்கள்தான் பொறுப்பு. உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த அன்வார் தவறியதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

நாட்டின் திசையை கட்டமைக்க அன்வாரின் தோல்விக்கு நீங்கள்தான் காரணம். 

ஏனென்றால், திறமையற்ற, திசை தெரியாத பழிவாங்கும் பிரதமரை நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset