நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெர்டேக்கா 118 கோபுரம் மலேசியாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு சான்றாகும்: மாமன்னர்

கோலாலம்பூர்:

பிஎன்பியின் மெர்டேக்கா 118 கோபுரம் மலேசியாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு சான்றாகும்.

இக்கோபுரத்தை அதிகாரப்பூரவமாக திறந்து வைத்த மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா மேற்கண்டவாறு கூறினார்.

சுதந்திரத்தின் திருப்பங்கள், பலதரப்பட்ட, பன்முக கலாச்சார தேசத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் வெற்றி அடையாளமாக இந்த கோபுரத்தை மலேசியர்கள் பார்க்க வேண்டும்.

 நாட்டின் பன்முகத்தன்மையை சுதந்திர தேசமாக கொண்டாடும் மக்களை இந்த கோபுரம் அடையாளப்படுத்துவதாகவும்  அவர் கூறினார்.

எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தாலும், இந்த கோபுரம் நமது நாடு காலப் போக்கில் எவ்வாறு சென்றது.

இறுதியில் சமூக ஒற்றுமை மதிப்புகளுடன் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக வெளி வருகிறது.

எனவே மலேசியர்கள் இக்கோபுரத்தை எண்ணி  பெருமிதம் கொள்ள வேண்டும்.

காரணம் மெர்டேக்கா 118 கோபுரம் மலேசியாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு சான்றாகும்.

மேலும் ஒரு பெரிய தேசிய முதலீட்டு நிறுவனமாக பிஎன்பி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த  தனது முயற்சிகளை தொடரும் என்றும் மாமன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.

துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது உயரமான கோபுரம் இந்த பிஎன்பி 118 கோபுரம் விளங்குகிறது.

இது 118 மாடிகளுடன்  678.9 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset