நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்கா துபாயின் எஸ்டி செல்லாது: ஜாஹிட்

கோலாலம்பூர்:

லங்கா துபாயின் எஸ்டி செல்லாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் துபாயில் சந்திப்புக் கூட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சி, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த கூட்டத்தின் வாயிலாக எஸ்டியும் தயார் செய்வதாக கூறப்படுகிறது.

பிரதமருக்கு ஆதரவை மீட்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதிய அரசாங்கம் அமைப்பதற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது தான் இந்த எஸ்டி ஆகும்.

தேசியக் கூட்டணி  அரசாங்கத்தை மாற்றுவதற்கு போதுமான  எஸ்டி  கொண்டுள்ளது என்ற கூற்றை ஏற்க முடியாது.

அதே வேளையில் இந்த எஸ்டியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜாஹிட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset