நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய தொழிலாளர் மோசடிகளை தவிர்க்க சட்டம் மேம்படுத்தப்படும்: சைபுடின்

புத்ராஜெயா:

அந்நிய தொழிலாளர் மோசடிகளை தவிர்க்க சட்டவிதிகளை  மேம்படுத்த அரசு இலக்கு கொண்டுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை உறுதிப்படுத்தினார்.

சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்த பிறகு ஏமாற்றப்படும்  அந்நிய தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய விதிமுறைகளை ஆய்வு செய்யப்படுகிறது.

தற்போதுள்ள சட்டத்தை மேம்படுத்தவும் உள்துறை அமைச்சும், மனிதவள அமைச்சும் உத்தேசித்து வருகிறது.

மனிதவளத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம்முடன் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் சந்திப்பின் போது,  இந்த விவகாரம் நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருக்கும் என்று  அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் தொழிலாளர்களை அழைத்து வருவது மற்றும் குடியேற்றச் சட்டம் 1959/63,  பிற தொழிலாளர் தொடர்பான சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு முதலாளிகள் இணங்கத் தவறியது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்  என்று அவர்   கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset