நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரசரனா டீசல் பேருந்துகளை வாங்க முடியாது; மார்ச் மாதத்தில் அமலுக்கு வருகிறது: லோக்

கோலாலம்பூர்:

மின்சார பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரசரனா மலேசியா  இனி டீசல் எரிபொருளில் இயங்கும் பேருந்துகளை வாங்க முடியாது.

வரும் மார்ச் மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது என்று போக்குவரத்துறை அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொள்முதல் டெண்டர் வழங்கப்பட்ட பிறகு 2025 முதல் காலாண்டில் டீசல் பேருந்துகளின் இறுதி தொகுதி டெலிவரி செய்யப்படும்.

வாங்கப்பட்ட பேருந்துகளில் 60% மினி பேருந்துகள். டீசல் பேருந்துகளின் இறுதித் தொகுதி இதுவாகும். 

இதற்குப் பிறகு, டெண்டர்கள் மின்சார வாகனங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் பிரசரனாவின் 2023 செயல்திறன் அறிக்கை மற்றும் அதன் 2024 திட்டத்தை முன்வைத்த பிறகு அவர்  கூறினார்.

இது மின்சார பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கான அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset