நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கவியல் அமைச்சின் தலைமைச் செயலாளராக டத்தோ ஹாஜி ரோட்ஸி நியமனம்

புத்ரா ஜெயா:

இலக்கவியல் அமைச்சின் தலைமைச் செயலாளராக டத்தோ ஹாஜி ரோட்ஸி பின் முகமட் சாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலக்கவியல் அமைச்சின் முதல் தலைமைச் செயலாளராக  நியமிக்கப்பட்டதற்கு டத்தோ ஹாஜி ரோட்ஸியை   பெரிதும் வரவேற்கிறேன் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

நாட்டின் டிஜிட்டல் லட்சியங்களை ஆதரிப்பதற்கும் அதை அடைவதற்கும் அமைச்சின் குழுவை டத்தோ ஹாஜி ரோட்ஸி வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.

60 வயதான டத்தோ ஹாஜி ரோஸ்டி யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் ஊடகம் மற்றும் தகவல் நரம்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் மலாயா பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை ஆய்வுகளில் இளங்கலைப் பட்டமும்  பெற்றுள்ளார்.

அவர் 34 ஆண்டுகள் சிவில் சேவையில் பணியாற்றியுள்ளார்.

எல்லை, கடல் மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் விரிவான அனுபவம் உள்ளவர்.

தேசிய பாதுகாப்பு இயக்குநராக பதவி வகித்துள்ளார்.  கடைசியாக  மம்பு தலைமை இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset