நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2023ஆம் ஆண்டுக்கான மித்ரா நிதியின் தணிக்கை கண்டிப்பாக செய்யப்படும்: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

2023ஆம் ஆண்டுக்கான மித்ரா நிதியின் தணிக்கை கண்டிப்பாக செய்யப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

கடந்தாண்டு மித்ராவிற்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியது. இந்த நிதியை கண்காணிக்கும் நோக்கல் பிரதமர் சிறப்பு நடவடிக்கை குழுவை அமைத்தார்.

அக்குழுவிற்கு நான் தலைமையேற்றேன்.  கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

இன்னும் ஒரு சிலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்தும் நிறைவு பெற்ற பின் கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதிக்கு முறையாக தணிக்கை செய்யப்படும்.

தற்போது மித்ரா, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனி தணிக்கை செய்வது எல்லாம் அவ்வமைச்சின் பொறுப்பு. அவ்வமைச்சிடம் தான் கேட்க வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset