நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ நாட்டிய கலாஞ்சலி நடனப் பள்ளியின்  பரத நாட்டிய சலங்கை பூஜை 

ஈப்போ:

ஈப்போவில் பிரசித்துப் பெற்ற பள்ளிகளில் ஒன்றாக திகழும் ஈப்போ நாட்டிய கலாஞ்சலி நடனப் பள்ளியின் பரத நாட்டியில் பரம் பயிலும் எட்டு மாணவிகளின்  சலங்கை பூஜை சிறப்புடன் நடைபெற்றது.

ஈப்போ கிந்தா இந்தியர்  சங்க மண்டபத்தில் இந்த நடனப் பள்ளியின் தலைவர் மு. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வைக் காண பெரும் திரளானோர் வருகை புரிந்தனர் .

கடந்த 2002 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட இந்த நடனப் பள்ளியின் 44 ஆவது சலங்கை பூஜை என்று அதன்  ஆசிரியை கி. புவனேஸ்வரி பன்னீர் செல்வம் கூறினார்.

இம்முறை கஷ்வினி ஜெயகுமார், காவியா கணேசன், கிரோஷா சரவணன், லஷ்மி ஸ்ரீ லோகநாதன், மிஷாஸ்ரீ ஜெயபிரபு , தீஷ்மீதா சதீஸ், துலாஷினி சந்திரன், யோகஸ்ரீ. பாஸ்கரன் ஆகிய எட்டு மாணவிகளின் சலங்கை பூஜை நடைபெற்றது. இம்மாணவிகளின் பரதம் பலரின் கவனத்தை ஈர்த்தது  .

இப்பள்ளியில் தங்களின் பரத நாட்டிய கல்வியை முடித்த பல மாணவர்கள் தங்களின் அரங்கேற்றத்தையும் நிறைவு செய்துள்ளதையும் கி. புவனேஸ்வரி நினைவுக் கூர்ந்தார்

பாவம், ராகம், தாளம் ஆகியவை முன்றின் சங்கமமே பரதம் , தெய்வத்தின் வாழ்க்கையை நடனத்தால் சித்தரிக்கவேண்டும் என்றால் அதற்கு பதில் பரதம் தான்.

இந்தியர்களின் பண்பாட்டு நாகரீகத்தை உலகிற்கு பறைசாற்றுவதில் நடனக் கலை பெரும் பங்காற்றியுள்ளது. இந்த கலை மென்மேலும் வாழ , வளர , இந்தியர்களின் பங்களிப்பு அவசியம் என்று புவனேஸ்வரி வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset