நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூலு சுல்தான் வழக்கு விவகாரம்; ஸ்பெயின்  நடுவர் மன்றத்தின் தலைவர் கொன்சேலோ ஸ்தம்பாவுக்கு ஆறு மாத சிறை 

கோலாலம்பூர்: 

சூலு சுல்தான் வாரிசுகள்  என்று கூறிக்கொண்டு பிரகடனம் செய்த தரப்பினருக்கு மலேசியா 1,492 கோடி அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய நடுவர் மன்றத்தின் தலைவர் GONZELO STAMPA விற்கு ஸ்பெயின் நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனையை விதித்தது. 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடுவர் கொன்செலோ ஸ்தம்பா குற்றவாளியே என்று தீர்ப்பு அளித்த ஸ்பெயின் நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனையுடன் நடுவர் மன்ற தலைவராக செயல்படுவதிலிருந்து ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த தகவலை  சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்தார். சூலு சுல்தான் வாரிசுகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் தரப்பின் வழக்கினை மலேசியா கடுமையான போக்குடன் கையாண்டதாக அமைச்சர் சொன்னார். 

மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக சூலு சுல்தான் வாரிசுகள் தொடுத்த வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ள மெட்ரிட் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடுவர் மன்ற தலைவர் கொன்சேலோ ஸ்தம்பா பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset