நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டாம்: பிரதமர் அன்வார் அறிவுறுத்தல் 

கோலாலம்பூர்: 

அரசாங்க துணை நிறுவனங்கள், அரசாங்க தொடர்புடைய முதலீட்டாளர் நிறுவனங்கள் நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ள கூடாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார். 

மாறாக, நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல கார்ப்பரேட்  நிறுவனங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

GLC மற்றும் GLIC ஆகிய நிறுவனங்கள் யாவும் நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு மலேசிய நிதியமைச்சு உறுதி செய்யும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார். 

அத்துடன், GLC, GLIC தரப்பினர்களும் அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுவார்கள் என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் செய்தியாளர்களிடம் சொன்னார். 

முன்னதாக, இலக்கவியல் மனிதவளத்தை உருவாக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் அரசாங்கத்தின் GLC,GLIC நிறுவனங்கள் அனைத்தும் தஙகளின் பங்களிப்பினை செவ்வனே ஆற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset