நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூஎம்எஸ் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண 2 மில்லியன் ரிங்கிட்: ஸம்ரி

கோத்தாகினபாலு:

மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் (யூஎம்எஸ்) நிலவுன் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸ்மரி அப்துல் காதிர் இதனை அறிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இம்மாணவர்களை சந்திக்க சென்ற அமைச்சரை அவர்கள் நாங்கள் குளிக்கவில்லை என்ற பாடலும் வரவேற்றனர்.

குறிப்பாக அம்மாணவர்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்த தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

பிரதமர் ஏற்கெனவே 3 மில்லியன் நிதிதை இப்பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கியுள்ளார்.

இந்நிதிகளை கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தாம் நம்புவதாக ஸம்ரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset