நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்திலும்  கசிவுகள் ஏற்படலாம்: ரஃபிசி

புத்ராஜெயா:

ஒற்றுமை அரசாங்கத்திலும் ஒரு சில கசிவுகள் ஏற்டலாம் என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி கோடிக் காட்டினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் தற்போது ஆட்சிப் புரிந்து வருகிறது.

இதில் ஒரு சில காரணங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கும்.

குறிப்பாக அரசாங்க நிதியில் கசிவுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதே ஒற்றுமை அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது.

ஆனால்  அவை நடக்காது என்று தன்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.

இது செயல்பாடுகள் போன்ற நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

அத்தகைய கசிவுகளுக்கு மனித அம்சம் முக்கிய பங்களிக்கும் காணமாகும்.

அடுத்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் அரசாங்க செலவினங்களில் கசிவுகள் பற்றிய அறிக்கைகள் இருக்காது என்று நம்புகிறீர்களா என்று ரபிசியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரபிசி மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset