நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீர்த் தடை காலத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்தால் 50,000 ரிங்கிட் அபராதம்: மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர்:

நீர்த் தடை காலத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிறுவனங்களுக்கு 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரித்தார்.

பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நீர்த் தடை ஏற்படவுள்ளது.

இந்த தடையை சமாளிக்கும் வகையில் பல முன்னேற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.

நீர்த் தடை காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

அப்படி வர முடியாத பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வருடாந்திர விடுமுறையை வழங்கலாம்.

அதை விடுத்து பணியாளர்களின் சம்பளத்தில் எந்தவொரு பிடித்தமும் செய்யக் கூடாது.

அப்படி ஏதும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக 50,000 ரிங்கிட் வரை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset