நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேரி தோட்ட பிரச்சினைகளை கண்டறிய பாப்பாராயுடு அடுத்த மாதம் மக்களை சந்திப்பார்

கோல சிலாங்கூர்:

மேரி தோட்ட பிரச்சினையை கண்டறிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு அடுத்த மாதம் அப்பகுதி மக்களை  சந்திப்பார்.

ஆட்சிக் குழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரி ஆனந்த் இதனை தெரிவித்தார்.

மேரி தோட்ட மக்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மோசமான சாலைகள், மேரி தோட்டம், சுங்கை திங்கி திட்டம், மின்சாக் தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முறையான போக்குவரத்து வசதி இல்லை.

இதனால் மாணவர்களின் பள்ளி படிப்பு பாதிப்புக்குள்ளாகிறது. இப்படி பல பிரச்சினைகளை இப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினையை விவேகமாகவும் இணக்கமாகவும் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு ஒப்புக் கொண்டுள்ளார். 

இந்த சந்திப்பு கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும்.

மாநில அரசும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சந்தித்து இப்பிரச்சினைக்கு  விரைவில் தீர்வு காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று ஆனந்த் கூறினார்.

ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு பிரதிநிதியாக ஆனந்த தலைமையில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் 50க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்  நூருல் ஷஸ்வானி நோவும் கலந்துகொண்டு பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset