நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மக்களின் கவனத்தை ஈர்க்காத கலைஞர் 100 விழா; அதிகமான காலி இருக்கைகள் காணப்பட்டன 

சென்னை: 

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கலைஞர் 100 விழா நேற்றிரவு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி. தலைமை தாங்கினார்.

இந்நிலையில், தமிழ்ச்சினிமாவின் சில முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு வராதது பல்வேறு வினாக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

அதேவேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது காலியான இருக்கைகளே பெருமளவில் காணப்பட்டது. இது தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 

அத்துடன், காமெடி நடிகர் வடிவேலு வருகை தந்தது தான் இதில் சுவாரஸ்யம். மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மறைவிற்கு வர முடியவில்லை, இருப்பினும் கலைஞர் 100 க்கு வந்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset