நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருவதாக மாநில பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு தெரிவித்தது. 

1,819 குடும்பங்களைச் சேர்ந்த 6564 பேர் வெள்ளம் காரணமாக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவை காட்டிலும் இன்று காலை 8 மணிக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கோத்தா திங்கி, குளுவாங், ஜொகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் உள்ள வெள்ள நிவாரண மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநில வெள்ள நிர்வாக செயற்குழுவின் நிர்வாகி டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார். 

கோத்தா திங்கியில் அதிகளவில் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2964 பேர் இங்கு பாதிக்கப்பட்ட வேளையில் குளுவாங்கி 1633 பேரும் ஜொகூர் பாருவில் 1844 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset