நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா நிதி குறித்து தடயவியல் தணிக்கை நடவடிக்கை விரைந்து மேற்கொள்க: ஶ்ரீ சஞ்ஜீவன் கோரிக்கை 

கோலாலம்பூர்: 

மித்ரா நிதிகள் யாவும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா அல்லது அதிகாரத்துஷ்பிரயோகம் நிகழ்ந்ததா என்பதை கண்டறிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் விரைந்து தடயவியல் தணிக்கையைக் கொண்டு வர வேண்டும் என்று பெர்சத்து கட்சியைச் சேர்ந்த சஞ்ஜீவன் கூறினார். 

நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மித்ரா நிதிகளுக்கு எதிராக தடயவியல் தணிக்கை கொண்டு வரப்படும் என்று கடந்த செப்டம்பர் 2022ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது வாக்குறுதி அளித்திருந்தார். 

மேலும், மைக்கா ஹோல்டிங்ஸ், எம்.ஐ.இ.டி ஆகிய அமைப்புகளுக்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார் என்பதை சஞ்ஜீவன் நினைவுறுத்தினார். 

மித்ராவிற்கு அரசாங்கம் வழங்கும் 100 மில்லியன் ரிங்கிட் என்பது குறைவான தொகையாகும். இதனால் என்ன மாதிரியான தாக்கத்தை இந்திய சமூகத்திடமிருந்து பெற முடியும் என்று சஞ்ஜீவன் வினா எழுப்பினார். 

கல்விக்கே அதிக முக்கியத்துவம் அரசாங்கமும் மித்ராவும் வழங்க வேண்டும். நிதி பற்றாகுறை ஏற்பட்டால் எவ்வாறு பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மித்ராவால் உதவ முடியும் என்றும் அவர் கேட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset