நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த ஆடவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

கோலாலம்பூர்: 

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரான டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியின் மந்திரி பெசாருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் அத்துமீறி நுழைந்த மூவரைக் காவல்துறையினர் இன்று விடுவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டதாக ஷா ஆலாம் போலீஸ் படை தலைவர் இக்பால் இப்ராஹிம் கூறினார். 

காவல்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட மூவருக்கு எதிராக தடுப்பு வைப்பு நடவடிக்கை கோரிக்கை விடுக்கப்பட்டும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் கருத்துரைத்தார். 

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 31 முதல் 35 வயதிற்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இரு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர். இந்த உத்தரவை மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் வழங்கியது. 

மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் பின்புறத்தில் இருந்து அத்துமீறி நுழைந்ததாக அமிருடினின் உதவியாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset