நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 மாநிலங்களில் 21 இயற்கை பேரிடர் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன

புத்ராஜெயா:

நவம்பரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஏழு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட 21 பேரிடர் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புகார்களில் எட்டு மாநில சாலைகள், 13 மத்திய சாலைகள் சம்பந்தப்பட்டதாக பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார். 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி தரவுகள் துல்லியமாக இருப்பதாக அவர் கூறினார்.

ஜொகூர், பகாங், கிளந்தான், பேரா, திரெங்கானு, கெடா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் இது கண்டறியப்பட்டது.

இதில் பத்து புகார்கள் நிலச்சரிவு, நான்கு புகார்கள் வெள்ளம், மேலும் நான்கு புகார்கள் சாலை இடிந்து விழுந்தது.

மேலும் மூன்று புகார்கள் பாலங்கள் சேதமடைந்த அல்லது இடிந்து விழுந்தது என்று குவா மூசாங்கில் சேதமடைந்த சாலையைப் பார்வையிட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset