நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்தாண்டு முழுவதும் அந்நியத் தொழிலாளர்களுக்குச் சொந்தமான 177 கடைகள் மூடப்பட்டன

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் அந்நியத் தொழிலாளர்களை உள்ளடக்கிய 3,158 பொது அபராத நோட்டிஸ்களை வெளியிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையின் மூலம், பொது வளாகங்களில் கடையமைத்திருந்த மொத்தம் 177 177 கடைகள் மூடப்பட்டதாகவும் அந்நியத் வியாபாரிகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 2,563 பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கோலாலம்பூர் மாநாகராட்சி மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அதே சமயம் மலேசியக் குடிநுழைவு துறை நீட்டிக்கப்பட்ட 41 வழக்குகளுக்கு மேலதிகமாக மொத்தம் 41 உரிமம் ரத்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. 

அந்நிய வியாபாரிகளின் கடை வளாகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான சிறப்பு நடவடிக்கைகள், அனுமதி அல்லது அனுமதியின்றி கட்டுமானத் தொழிலாளர்கள்), வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் சந்தைகளுக்கான சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset