செய்திகள் வணிகம்
பெஸ்ஸா ரக கார் பழுதடைந்த விவகாரம்; பெரோடுவா நிறுவனம் விசாரணை மேற்கொள்கிறது
கோலாலம்பூர்:
பெரோடுவா பெஸ்ஸா ரக காரை வாங்கிய ஒரே நாளில் பழுதடைந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் முன்னணி கார் நிறுவனமான பெரோடுவா நிறுவனம் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக பெரோடுவா தலைமை நிர்வாக அதிகாரி ஜே.எச். ரொஸ்மான் ஜாஃபார் கூறினார்.
அதோடு இந்த விவகாரத்திற்குச் சுமூகமான முறையில் தீர்வு காண பெரோடுவா நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
கார் பழுதடைந்த விவகாரத்திற்குப் பெரோடுவா நிறுவனம் துரித நடவடிக்கையை மேற்கொள்ளும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்குத் தற்காலிகமாக ஒரு கார் வழங்கப்படும் என்றும் மேலும் அதே ரகத்திலான காரை மீண்டும் வாங்கவும் பெரோடுவா நிறுவனம் வாய்ப்பு வழங்கும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.
முன்னதாக, ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த நாகக்கன்னி சுப்ரமணியம் என்பவர் புதிய பெஸ்ஸா ரக கார் வாங்கி ஒரே நாளில் பழுதடைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் தமது முகநூலில் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் வைரலானது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 5:44 pm
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 30, 2024, 10:30 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am