நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடு தரவு தளம் சீராகச் செயல்படுகிறது: ஃபாஹ்மி பாட்சில் 

பெட்டாலிங் ஜெயா :

அரசாங்கத்தால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட முதன்மை தரவுகள் தளமான பாடு சீராகச் செயல்படுகிறது என்று தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் தெரிவித்துள்ளார். 

இந்தத் தளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் யாவும் நிவர்த்திச் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், இத்தளத்தில் பாதுகாப்பு அம்சம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

பாடு பயனரின் கடவுச்சொல்லை மாற்றம் செய்ய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்துவதற்கான சிக்கலை மேற்கோள் காட்டி ஒரு மணி நேரத்திற்குள் சிக்கல் தீர்க்கப்பட்டதாக ஃபாஹ்மி கூறினார்.

ஏதேனும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை படு இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

பாடு என்பது நாட்டிலுள்ள அனைத்துக் மக்களின் விரிவான தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்கள் அடங்கிய அரசாங்கத் தரவுத்தளமாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset