நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

படுமோசமான வறுமையை PADU  முடிவுக்கு கொண்டு வரும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில் படுமோசமாக வறுமை  PADU முடிவுக்கு கொண்டு வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

 PADU எனப்படும் முதன்மை தரவுத் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தரவுத் தளம் 2024ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றான மானியங்களை திறம்பட வழங்குவதை உறுதி செய்யும்.

தேவைப்படுவர்களுக்கு என திட்டங்கள், மானியங்களுக்காக அரசாங்கம் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவிடுகிறது.

ஆனால் இதில் விரயமும் கசிவு தொடர்ந்து நடப்பதால் தேவையில்லாத விரயம் ஏற்படுகிறது.

குறிப்பாக கிராமப்புற , தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 22 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக  செலவிட்டுள்ளது.

இருப்பினும், பல்வேறு திறமையின்மைகளால் சம்பந்தப்பட்டவர்கள் முழுத் தொகையைப் பெறுவதைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்போது கிட்டத்தட்ட 80 பில்லியன்  ரிங்கி மானியங்களில் 3.5 மில்லியன் வெளிநாட்டினர், பணக்காரர்களால் அனுபவிக்கப்படுகின்றன.

இதுபோன்றவற்றை எல்லாம் தடுக்க இந்த  PADU முதன்மை தரவுத் தளம் முக்கிய பங்கை ஆற்றும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset