நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏஎப்சி ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் ஊடக நிர்வாகியாக கிறிஸ்டபர் ராஜ் நியமனம்

கோலாலம்பூர் :

ஏஎப்சி ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஊடக நிர்வாகியாக கிறிஸ்டபர் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் வெள்ளிக்கிழமை கட்டாருக்கு பயணமாகவுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த கால்பந்து ஊடகத் துறையில் கிறிஸ்டபர் ராஜ் முக்கிய பிரமுகராக விளங்கி வருகிறார்.

கடந்தாண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஊடக நிர்வாகியாக அவர் செயல்பட்டார்.

அவரின் சிறப்பாக சேவையை தொடர்ந்து தற்போது ஏஎப்சி ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு அவர் ஊடக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போட்டி வரும் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி வரை கட்டாரில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏஎப்சி ஆசியக் கிண்ணம், ஐக்கிய அரபு சிற்றரசுவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி ஆகியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.

தற்போது மூன்றாவது முறையாக இந்த ஆசிய கால்பந்துப் போட்டிக்கு செல்லவுள்ளார்.

வரும் ஆசியப் போட்டியில் கிறிஸ்டபர் ராஜ் அல் ஜனோப், அல் பேட், ஜாசிம் பின் ஹமாத், லுசைல் ஆகிய 4 அரங்குகளில் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிபா உலகக் கிண்ண இறுதி ஆட்டம் இந்த லுசைல் அரங்கில் நடைபெற்றது.

இந்த அரங்கம் கிறிஸ்டபர் ராஜ் பணிகளை மேற்கொள்ள முக்கிய தளமாக விளங்குகிறது.

மேலும் கிறிஸ்டபர் ராஜ் 15 போட்டிகளை கண்கானிக்கவுள்ளார். இதில் தொடக்க, இறுதி ஆட்டமும் அடங்கும்.

ஏஎப்சி ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி கண்டத்தில் உள்ள சில சிறந்த அணிகளின்  திறமையை வெளிப்படுத்தும்.

மேலும் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ஆர்வலர்களுக்கு போட்டியின் உற்சாகத்தையும் நாடகத்தையும் கொண்டு செல்வதில் ஊடக நிர்வாகியாக  கிறிஸ்டபர் ராஜின் பங்கு கருவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset