நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நல்லதோர் வீணை செய்தே எனும் கருப்பொருளில் பாரதி பெருவிழா 

பெருவாஸ்: 

பாரதியின் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன் அவர்களின் வாழ்த்துரையோடு தொடங்கிய பெருவிழாவில் தவத்திரு சுவாமி பிரம்மானந்தா அவர்களின் ஞானம் செறிந்த உரை, முன்னாள் விரிவுரையாளர் தமிழ்மாறன் அவர்களின் பாரதி எழுச்சியுரை ஆகியவற்றோடு பெருவாஸ் நாடளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பொறுப்பதிகாரி  தினகரன் கோவிந்தசாமி பாரதியின் பாடலோடு தொடங்கிய தலைமையுரை, சுங்கை வாங்கி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தலைவர் சுப.கதிரவன்  வாழ்த்துரை ஆகியவை இடம்பெற்றன.

ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் இந்த பாரதி விழாவில் மாணவர் படைப்புகள் பிரமிக்க வைத்தன. நாடகம், வில்லுப்பாடு, பறையோசை, சொற்போர், மாறுவேடப் போட்டி, கவிதைபோட்டி, வர்ணம் தீட்டும் போட்டி என அரங்கேறின.

மகாகவி பாரதியின் 141 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு 141 தென்னங்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.

காலை 8.30க்குத் தொடங்கிய பெருவிழா மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தன.

இவ்விழாவில் பாரதி நெஞ்சம் இயக்கத்தின் தலைவர் முனுசாமி ஆசிரியர் முன்னாள் விரிவுரையாளர் குமாரசாமி கூலிம் நகரிலிருந்து சிறப்பு வருகை புரிந்தனர்.

பினாங்கு இந்திய பாரம்பரிய கழகத்தின் பொறுப்பாளர் மகாலிங்கம் ஐயா சிறப்பு வருகை புரிந்திருந்தனர்.

பெருவாஸ் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் குணசீலன், பள்ளியில் விழா நடத்த இசைந்ததோடு மிகுந்த ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கினார்.

பெங்கலான் பாரு சட்டமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பொறுப்பதிகாரி குமரன், ஈப்போ குறிஞ்சித்திட்டு கழகத்தின் தலைவர்  பிரபு, ஆசிரியர் கோபால், முன்னாள் ஆசிரியர் கோவிந்தன், பெருவாஸ் பிரமுகர் ஜெகநாதன், பெற்றோர், மாணவர்கள்  இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset