நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு 

சென்னை: 

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜன் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விடாமுயற்சி திரைப்படத்தை இவ்வாண்டுக்குள் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித்குமாருடன் நடிகர்கள் அர்ஜூன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கஸண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் நடிக்கின்றனர். 

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset