நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு கொண்டாட்டத்தால் 3.06 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்:

புத்தாண்டு கொண்டாட்டாத்தால் தலைநகரை சுற்றி சேகரிக்கப்பட்ட மொத்த குப்பைகளின் அளவு 3.06 டன்னாக அதிகரித்துள்ளது.

அலாம் புளோராவின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் அனுவார் முகமத் ஷா இதனை தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு முதல் நாள் தொடங்கி தலைநகரில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.

குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து அதிகமானோர் தலைநகருக்கு வந்திருந்தனர்.

இதனால் இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தால் மொத்தம் 3.06 டன்  குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு இதே கொண்டாட்டத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் அளவு 2.98 டன்னாக இருந்தது.

கடந்தாண்டு முழுவதும் அலாம் புளோரா பணியாளர்கள் தலைநகர் முழுவதும் 700,000 டன் குப்பைகளை சேகரித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டை காட்டிலும் இது 4 சதவீதம் அதிகம்.

இந்த அளவு ஒரு நாளைக்கு 1,900 முதல் 2,000 டன் குப்பைகளுக்கு சமம் .

இதனால் குடியிருப்பாளர்கள் காலத்துக்கு ஏற்ப, தூய்மையான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset