நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய குடும்ப பிரச்சாரத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளை  எம்ஏசிசி விசாரிக்கிறது

புத்ராஜெயா:

மலேசிய குடும்ப பிரச்சாரத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்ஏசிசி விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கம் மலேசிய குடும்பம் எனும் பிரச்சாரத்தை தொடங்கியது.

இந்த பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிதியில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எம்ஏசிசி விசாரணைகளை தொடங்கியுள்ளது.

குறிப்பாக இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றும் நோக்கில் ஒரு குழு பிரதமர் துறைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே வேளையில் ஆதாரங்களை திரட்டுவதற்காக அதிகாரிகள் நிதியமைச்சுக்கும் சென்றுள்ளனர்.

2021 ஆகஸ்ட் மாதத்தில் இஸ்மாயில் அறிமுகப்படுத்திய மலேசிய குடும்பம் கருத்தாக்கத்தின் விளம்பர நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக உயர்மட்ட தகவல்கள் கூறுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset