நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி செல்ல முடியாமல் தவித்த மாணவி ஷிவானி; குடும்பத்தைச் சந்தித்த  கல்வி அமைச்சு 

கோலாலம்பூர்: 

முறையான குடியுரிமை ஆவணம் இல்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவி ஷிவானியின் விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு மாணவி ஷிவானியின் குடும்பத்தினருடன் சந்திப்பு நடத்தியுள்ளது. 

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா தரப்பினர்கள் மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்தனர். ஷிவானி எதிர்நோக்கி வரும் சிக்கலைக் களைய இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்விவகாரம் தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா மாணவரின் பதிவு, நிர்வகிப்பு தொடர்பாக முழுமையான பணிகளை மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. 

முன்னதாக, பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத சூழல் காரணமாக இந்த விவகாரத்தில் தமக்கு உதவுமாறு மாணவி ஷிவானி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

மாணவி ஷிவானி மூன்றாம் ஆண்டு வரை தாமான் ஶ்ரீ பாகி தேசிய பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில் நான்காம் ஆண்டுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

முறையான குடியுரிமை ஆவணம் இல்லாத காரணத்தால் மாணவி ஷிவானி நான்காம் ஆண்டு கல்வி படிப்பைத் தொடர முடியாது என்று பள்ளி தரப்பு தெரிவித்திருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset