நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெக்கூனில் இந்தியர்களுக்கு கூடுதல் நிதி: டத்தோ ரமணன் கோரிக்கை

புத்ராஜெயா:

தெக்கூனில் இந்தியர்களுக்கு கூடுதல் நிதியை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை அமைச்சு ஒதுக்க வேண்டும் என்று அத்துறையின் அமைச்சர் டத்தோ இவான் பெனடிக்கை சந்தித்த துணையமைச்சர் டத்தோ ரமணன் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்திய தொழில் முனைவர்கள் மேம்பாட்டிற்காக தெக்கூன் வாயிலாக அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது.

அதிகமான இந்தியர்கள் வர்த்தகத்தில் சாதிக்க தெக்கூன் போன்ற உதவிகள் தேவைப்படுகிறது.

அவர்களுக்கு அமைச்சு உரிய வழிக்காட்டல்களை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில் தெக்கூனில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக அதிகமான இந்தியர்கள் பயன் பெறுவார்கள் என்று டத்தோ ரமணன் அமைச்சரிடம் கூறினார்.

தற்போதைய சவால்களை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.

ஆகவே தெக்கூனில் இந்திய சமூக வணிகர்களுக்கு கூடுதல் நிதி ஒதுகப்படும் என நான் நம்புகிறேன்.

அதே வேளையில் அமைச்சின் கீழ் இயக்கும் எஸ்எம்இ கோர்ப் உட்பட இதர இலாகாக்களில் உள்ள வாய்ப்புகளை இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset