நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஜிட்டல் தொழில் நுட்ப முயற்சிகளில் ஒன்றாக முதன்மை தரவு தளம் அறிமுகம்: கோபிந்த் சிங்

புத்ரா ஜெயா:

மக்களுக்கு அரசு சேவைகளை மேம்படுத்தும் டிஜிட்டல் தொழில்நுட்ப முயற்சிகளில் ஒன்றாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் PADU எனப்படும் முதன்மை தரவு தளத்தை  அறிமுகப்படுத்தியதை பெரிதும் வரவேற்கிறேன் என்று இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மக்களின் நலனை மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை அரசாங்கம் மேம்படுத்தும் வகையில் பொருளாதார அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி பெரிதும் பாராட்டப்படுகிறது.

நாட்டின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளில் தரவு மற்றும் ஆன்லைன் அடையாள அமைப்புகள் ஒரு முக்கிய அடித்தளமாகும். 

அதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு அதிக இலக்கு, பயனுள்ள சேவைகளை வழங்க முடியும்.

குறிப்பாக எதிர்கால டிஜிட்டல் துறையில் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் உயிர் வாழ்வதற்கும் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் டிஜிட்டல் அமைச்சு தொடர்ந்து ஆதரிக்கவும்  மேம்படுத்தவும் உதவும் என்றார்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதன்மை தரவு தளத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அஹமத் ஜாஹிட் ஹமிடி, இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி ஆகியோரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset