நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் 5,000 ஹெக்டர் விவசாய நிலம் சேதமடைந்தன: 23 மில்லியன் ரிங்கிட் இழப்பு

புத்ராஜெயா:

நாட்டில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தால் 5,000 ஹெக்டர் விவசாய நிலங்கள் சேதமடைந்த நிலையில் 23 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

திரெங்கானு, கிளந்தான் உட்பட பல மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஏறக்குறைய 2,269 விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்றார் அவர் 

நாட்டில் பெய்த கனமழையால் கிளந்தான் உட்பட பல மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட 5000 ஹெக்டர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.

இது 2,269 விவசாயிகளை பாதித்துள்ளது.  குறிப்பாக கிளந்தானில் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில் கிளந்தானில் 23 சுகாதார மையங்களும்  சேதமடைந்துள்ளன.

இதே போன்று பகாங்கில் 17, திரெங்கானுவில் 11 என மொத்தம் 51 சுகாதார மையங்கள் இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன என்று மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான ஜாஹித் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset