நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பெட்ரோல் நிறுவனங்களுக்கு ரூ. 1.32 லட்சம் கோடி கொள்ளை லாபம்: பிரியங்கா காந்தி

புது டெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங்களில் 29 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் பல மாதங்களாக எந்தவித மாற்றமும் செய்யாமல், தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம், கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset