நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கார்கள் வாங்குவது வழக்கமான நடைமுறைதான்: திரெங்கானு அரசு

கோலாலம்பூர்:

புதிய கார்கள் வாங்குவது வழக்கமான நடைமுறை தான் என்று திரெங்கானு மாநில அரசின் தலைமை செயலாளர் தெங்கு பாரோக் ஹுசைன் கூறினார்.

மாநில மந்திரி புசார், ஆட்சிக் குழு  உறுப்பினர்களுக்கு புதிய கார்கள் வாங்குவது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே புதிய கார்கள் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பழைய கார்களின் நிலை மோசமாக இருப்பதை தொடர்ந்து மாநில அரசு இந்த முடிவை எடுத்தது.

ஆனால் மாநில மந்திரி புசார் அஹ்மத் சம்சூரி மொக்தாரின் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் இந்த விவகாரத்தை ஒரு சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர்.

இதில் சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இது வழக்கமான நடைமுறை தான் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset