நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீர் காசாவாக மாறும்: ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை

ஸ்ரீநகர்:

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், காஸாவைப் போன்ற சூழல்  காஷ்மீரிலும் ஏற்படலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஃபரூக் அப்துல்லா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி மக்கள் 8 பேரில், மூன்று பேர் கடுமையாக தாக்கப்பட்டதோடு, காயங்களில் மிளகாய்பொடியை தூவி சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். சித்ரவதையை தாங்க முடியாமல் மூவரும் இறந்துவிட்டனர். மற்ற 5 பேரும் மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த விவகாரத்தில், ராணுவ அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது மட்டுமே தீர்வாகாது.
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? என்ற கேள்விக்கு, நட்பு நாடுகளை நாம் மாற்றிக் கொள்ளலாம்; ஆனால், அண்டை நாடுகளை மாற்ற முடியாது' என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வார்த்தைகள். அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருந்தால், இருதரப்பும் வளமாக வாழலாம். பகைமையில் வாழ்ந்தால், வளர்ச்சி மந்தமாகும்.
"போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தைகளே அவசியம்' என்று கூறும் பிரதமர் மோடி, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்?

பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், காசாவில் பாலஸ்தீனர்கள் எதிர்கொள்ளும் அதே சூழல் காஷ்மீரிலும் ஏற்படலாம் என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன் என்றார் ஃபரூக் அப்துல்லா.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset