நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ள நிலைமையை கண்காணிக்க பிரதமர் நாளை கிளந்தான் செல்கிறார்


புத்ராஜெயா: 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை செல்லவுள்ளார்.

இப்பயணத்தின் போது பேரிடர் குறித்த மாநிலத்தின் நடவடிக்கையை அவர் கண்காணிக்க உள்ளார்.

இந்த ஆண்டு வெள்ளத்தால் கிளந்தான் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள  இதுவரை 17,466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள்  5,510 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை  15,994 பேராக இருந்தது.

தாய்லாந்தின் புக்கெட்டில் பிரதமர் 
 ஸ்ரேத்தா தவிசினுடன் வெள்ளம் குறித்து சுருக்கமாக விவாதித்ததாக அன்வார் கூறினார்.

மேலும்  நாளை கிளந்தானுக்குச் சென்று அங்கு அதிகரித்து வரும் கவலைக்குரிய சூழ்நிலையை மதிப்பிடுவேன் என்று அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset