நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பகத்தன்மையை மேம்படுத்த மித்ராவை சட்டப்பூர்வ அமைப்பாக்குங்கள்: அரசுக்கு கணபதிராவ் வேண்டுகோள்

கிள்ளான்:

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) அதன் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்த சட்டப்பூர்வ அமைப்பாக மாற்ற வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் முன்மொழிந்துள்ளார்.

சட்டப்பூர்வ அமைப்பாக மித்ரா வாரியத்திற்கும் பிரதமருக்கும் நேரடியாக அறிக்கை அளிக்கும் என்றார்.

மித்ராவை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக ஆக்குவது அதன் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும்.

ஏனெனில் நிதி அறிக்கைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மித்ராவின் அனைத்து செயல்பாடுகளும் இந்த வாரியத்தால் கண்காணிக்கப்படும், இது இந்திய சமூகத்தைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களை உள்ளடக்கியது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மித்ரா மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் அமர்த்தப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இது முன்பு பிரதமர் துறையின் (ஜேபிஎம்) மேற்பார்வையில் இருந்தது.

இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான சிறப்புப் பிரிவைத் தொடர்ந்து கண்காணிப்பதாகப் பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்ததாக பெர்னாமா செய்தியை வெளியிட்டுள்ளது.

மித்ரா தனது நோக்கங்களை அடைவதை உறுதி செய்வதற்கான தனது முன்மொழிவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரிய பரிசீலனை அளிப்பார் என்று கணபதி ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset