நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க தூதரகத்தின் முன் முற்றுகை போராட்டத்தை போலீசார் தடுத்துள்ளனர்

கோலாலம்பூர்:

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே திட்டமிடப்பட்ட ஆறு நாள் முற்றுகை  போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தாபோங் ஹாஜி கோபுரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர்அமெரிக்க தூதரகத்திற்கு சாலையோரம் அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான முயற்சிகளுக்கு எதிரான முயற்சிகளை அமெரிக்கா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அதனைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர்.

அதே வேளையில் காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

எனினும், தூதரகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

மலேசியாவில் பொது ஒழுங்கையும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது போலீஸ்படையின் பொறுப்பு.

அதன் அடிப்படையில் அவர்களை போலீஸ் தடுத்தது.

மேலும் திட்டமிட்டபடி அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் கூடாரங்களை அமைக்க வேண்டாம் என்றும் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது  என்று கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் அலாவூதின் அப்துல் மஜித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset