நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரபிக் கடலில் 3 போர் கப்பல்களை நிறுத்தியது இந்தியா

புது டெல்லி:

சரக்கு கப்பல் மீது ட்ரோன்  தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏவுகணைகளை தாக்கிய அழிக்கும் 3 போர்க் கப்பல்களை அரபிக் கடலில் இந்தியா நிறுத்தி உள்ளது.

இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமன் நாட்டின் ஹவூதி போராளிகள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி. கெம் புளூட்டோ  மீது சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

Arabian Sea Ship Attack: India Deploys 3 Warships In Arabian Sea Amid  Rising Ship Attacks | India News, Times Now

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்தது.

செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. சாய்பாபா சரக்கு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் மர்மகோவா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய போர்க் கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தொலைதூர கண்காணிப்புக்கு அதிநவீன பி8ஐ விமானத்தையும் இந்தியா அரபிக் கடலில் நிறுத்தி உள்ளது.விமானப் படை ஈடுபட்டுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset