
செய்திகள் இந்தியா
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
உத்தரப் பிரதேசம்:
இந்தியாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணமடைந்தது தொடர்பில் Google Maps மீது விசாரணை நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மூவர் மாண்டனர்.
காரில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்கள் Google வரைபடத்தின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
வரைபடம் அவர்களை கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்துக்கு இட்டுச்சென்றது.
அதைக் கவனிக்காத ஆடவர்கள் மேம்பாலத்திலிருந்து ராம்கங்கா ஆற்றங்கரையில் விழுந்தனர்.
மாண்டோர் குடும்பங்களுக்கு Google இரங்கல் தெரிவித்தது.
அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்கவுள்ளதாக அது கூறியது.
Google Maps அதிகாரி ஒருவரைக் காவல்துறையினர் ஏற்கெனவே விசாரித்திருக்கின்றனர்.
பொதுப்பணித் துறையைச் சேர்ந்த சிலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm