
செய்திகள் மலேசியா
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே 6 நாள் முற்றுகை போராட்டம்
கோலாலம்பூர்:
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே 6 நாள் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த முற்றுகை போராட்டம் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனத்திற்கான முற்றுகை என்ற அடிப்படையில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தலைநகர் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூடாரங்களில் முகாமிட்டு ஒவ்வோர் இரவும் ஒற்றுமை நிகழ்வுகளை நடத்தவுள்ளனர்.
கிட்டத்தட்ட 48 அரசு சாரா இயக்கங்களில் இருந்து ஆதரவாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று பாஸ்தீன ஒற்றுமை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 4:35 pm
கெடாவில் மூர்க்கத்தனமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம்: மன்சோர் ஜக்காரியா
April 3, 2025, 4:33 pm
தீ விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
April 3, 2025, 4:32 pm
வீடு முழுவதும் சாம்பல்; பெருநாள் உணவுகள் அப்படியே மேஜையில் இருந்தன: பாதிக்கப்பட்டவர்
April 3, 2025, 3:49 pm
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து: அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்
April 3, 2025, 3:46 pm