நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்.எச்.370 விமானத்தைத் தேடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தகவல் 

கோலாலம்பூர்: 

காணாமல்போன எம்.எச்.370 விமானத்தைத் தேடு பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் கூறினார் 

தற்போதுள்ள சில மாதங்களுக்கு இந்த தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வேளையில் மீண்டும் விமானத்தைத் தேடும் பணிகள் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்படும் என்று லோக் கூறினார். 

விமானத்தைத் தேடுவதற்கான ஆரம்ப கட்ட தேடுதல் நடவடிக்கைகளில் எந்தவொரு பலனும் கிட்டவில்லை. 

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய விமானமான எம்.எச் 370 விமானம் மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்டது 

ஆனால் விமானம் ராடாரிலிருந்து காணாமல் போன அந்த விமானத்தில் 239 பேர் பயணம் செய்ததாக அரசாங்கம் குறிப்பிட்டது 

விமானம் இறுதியாக இந்திய சமுத்திரத்தில் விழுந்திருக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிட்டது 

விமானத்தைத் தேடியும் எங்கும் கிடைக்காமல் போனது. தற்போது வரை விமானத்தைத் தேடும் பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்களும் மலேசியாவிற்கு உதவிகள் புரிந்துள்ளன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset