
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து: அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்
ஜார்ஜ்டவுன்:
சிலாங்கூர் மாநில புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் அருகிலுள்ள குடியிருப்பு வீடுகள் யாவும் பெரும் சேதமடைந்தன
இந்த மோசமான விபத்து இனிமேல் நிகழாமல் இருக்க அரச விசாரணை ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹிடின் அப்துல் காதர் கூறினார்
விபத்து நடந்ததற்கான காரணங்கள், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து பல நிலைகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன
ஆக, ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அரச விசாரணை ஆணையம் சுயேட்சையாகவும் ஒளிவு மறைவின்றி விசாரணையை முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்
இந்த விவகாரத்தில் கீழறுப்பு நடவடிக்கைகள் இருப்பது தெரியவந்தால் அரச விசாரணை ஆணையம் கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தரப்பிடம் பரிந்துரை செய்யலாம்
கடந்த செவ்வாய்கிழமை புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்தினால் சுமார் 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 11:17 am
தேசிய, மாநில அளவிலான இந்து அறநிலை வாரியம் உருவாக்கப்பட வேண்டும்: மலேசிய இந்து இளைஞர் பேரவை
April 4, 2025, 10:48 am
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து: யார் பொறுப்பு?
April 4, 2025, 10:46 am
எரிவாயு குழாய் தீ விபத்தால் மசிமோ ரொட்டிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது
April 4, 2025, 10:11 am
ஜூலை மாதத்தில் ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 25 விழுக்காடு குறையலாம்: சிஐஎம்பி வங்கி
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm