நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் 

கோலாலம்பூர்: 

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் மூலமாக கடுமையாக பாதிப்படைந்த நபர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதார துறையின் இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் கூறினார் 

பாதிக்கப்பட்ட நபர் தற்போது அம்பாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் 

மேலும் மூன்று பாதிக்கப்பட்ட நபர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் 

சைபர்ஜெயாவில் சிகிச்சை பெற்று வந்த 26 பேரில் 23 பேர் குணமடைந்து இல்லம் திரும்பினர். மேலும் மூவர் கோலாலம்பூர் மருத்துவ்மனைக்கு மாற்றப்பட்டனர். 

முன்னதாக, புத்ரா ஹைட்ஸ் வெடி விபத்து தொடர்பாக 86 பேர் சிகிச்சை பெற்றதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset